யாழ்.கட்டைக்காட்டில் காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான தேவதாஸ் யூலி அலக்சன் (வயது 38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

குறித்த மீனவர் கடந்த 09 ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றிருந்த நிலையில் கரை திரும்பவில்லை. அந்நிலையில் அவரது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன கரையோதிங்கின. அதனை அடுத்து குறித்த மீனவரை தேடி கட்டைக்காடு மீனவர்கள் கடலுக்கு சென்று தேடிய போதிலும் மீனவரை காப்பாற்ற முடியவில்லை. அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like