இன்றைய ராசிபலன் 13-03-2018

மேஷம்: உற்சாகமான நாள். தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

ரிஷபம்: தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். அதனால் உடலும், மனமும் சோர்வாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும்.

மிதுனம்: உறவினர்களின் வருகையால் நன்மையும், மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடவேண்டாம்.அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை எடுப்பதற்கு மிகவும் உகந்த நாள்.

கடகம்: உற்சாகமான நாள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சிம்மம்
: உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி
: தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உடல்நலம் சற்று பாதிக்கப்படும். தேவையில்லாத அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

துலாம்: மனதில் நிம்மதி ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிக்கமுடியும். எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையான பணவரவு இருக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சி சாதகமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு: குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படக்கூடும். செய்யும் காரியங்களில் தடை ஏற்படலாம். நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மகரம்: எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்: தேவையற்ற அலைச்சலும், அதனால் வீண் செலவுகளும் ஏற்படும். தேவையில்லாத குழப்பங்கள் மனதில் இருப்பதால், எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருப்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் சோர்வுடன் காணப்படுவீர்கள். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

மீனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு எனினும் உடல்நலம் சற்று பாதிக்கப்படும் என்பதால் அன்றாட பணிகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலர் புதிய ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்றைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like