இலங்கையில் பேஸ்புக் கட்டுப்படுத்தப்படுமா? தடை செய்யப்படுமா?

இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடை செய்ய முடியுமா என ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உலகின் வளர்ச்சி அடைந்த நாடு ஒன்றில் பேஸ்புக் தடை செய்யும் நடைமுறை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் பிரதேசம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பேஸ்புக் வலைத்தளத்தை தடைசெய்வதற்கு பதிலாக கட்டுப்படுத்துவது சிறந்தது என அவர் கூறியுள்ளார்.

அதற்காக மக்களின் கருத்தை வினவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இதுவரையில் சீனா, வடகொரியா, எத்திரியா, ஈரான், வியட்னாம் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

உலகின் சில நாடுகளினால் பேஸ்புக் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு அந்தந்த நாடுகளின் புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து கணக்குகள் ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.