அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனத்திடம் விமானங்களை வாங்கும் சிறிலங்கா

அமெரிக்க அரசாங்கத்தின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரிவிர சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அரசுக்குச் சொந்தமான, Rosoboronexport நிறுவனம் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், 2014ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க திறைசேரியினால் கருப்புப் பட்டியலில் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் மூலமே சிறிலங்கா விமானப்படைக்கான விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

எம்.ஐ-171 உலங்குவானூர்திகள்-10, ஐஎல் -76 எம் சரக்கு விமானங்கள் -02, எஸ்.யூ-30 தாக்குதல் போர் விமானங்கள் -06 என்பனவே இந்த நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like