இன்றைய ராசிபலன் 12-03-2018

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உற்சாகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மாலையில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரிஷபம்: அனுகூலமான நாள். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். உறவினர்கள் வருகையால் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.. வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.

மிதுனம்
: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்பட்டாலும், அவர்களுக்காகக் கூடுதல் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.

சிம்மம்: எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான எந்த முடிவையும் இன்றைக்கு எடுக்காமல் தவிர்ப்பது நல்லது. வீட்டுப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகள் வகையில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகக்கூடும்.

கன்னி: எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கு இடையில் சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். ஆனால், தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பயணங்கள் மேற்கொள்வதையும், கடன் வாங்குவதையும் தவிர்க்கவும்.

துலாம்: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பாக்கித் தொகைக்காக வாடிக்கையாளருடன் சிறு சச்சரவு ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: உற்சாகமான நாள். சகோதரர்களால் ஆதாயமும் இருக்கும்; அலைச்சலும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மகரம்
: அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் கூடுதல் பணிகளை ஏற்கவேண்டி இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

கும்பம்
: தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மீனம்
: புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி இருக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.