வரலட்சுமி விஜய்க்கு வில்லியா?

வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கும்போது வருடத்துக்கு ஒரு படம் என்பதே அதிகபட்சமாக இருந்த நிலையில் குணசித்திர வேடங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கிய பின் கடந்த ஆண்டு மட்டும் 6 படங்களில் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்தப் படமும் இன்னும் வெளியாகாத நிலையில், கைவசம் சண்டகோழி 2, நீயா 2, மாரி 2, சக்தி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர். சந்திரமௌலி, கன்னிராசி உள்ளிட்ட பல படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விஜய் மல்ட்டி மில்லியனராக நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன் கதாபாத்திரங்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகியது.

ராதாரவியும், பழ.கருப்பையாவும் உறுதியான பின் மூன்றாவது வில்லன் யார் என்ற கேள்வி எழுந்தது. வரலட்சுமி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானதும் வரலட்சுமி வில்லி வேடத்தில் நடிப்பதாகத் தகவல் பரவிவருகிறது. ஆனால், படக்குழு வரலட்சுமி கதாபாத்திரம் குறித்து எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.

Get real time updates directly on you device, subscribe now.