இலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகளை கண்காணிக்க ஜேர்மன், சீனா தொழில்நுட்பங்கள்

இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்காக வெளிநாடுகளில் அமுல்படுத்தப்படும் நடைமுறைகளை பின்பற்ற இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்காக ஜேர்மன் – பிலிபைன்ஸ் நாடுகள் கடைபிடிக்கும் தொழில்நுட்ப முறை தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இனவாத சம்பவங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக சீனாவில் சமூக வளைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு சீனா அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய நீண்ட கால செயற்பாடாக சீனாவினால் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.