கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

கொழும்பில் இருந்து இரவு நேர தபால் ரயிலில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ரயிலில் ஒதுக்கப்பட்ட ஆசன பகுதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.

ரயில் கழிப்பறை கட்டமைப்பு அசுத்தமாக உள்ளமையினால், ரயில் கழிப்பறையை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் சிறுநீர் மற்றும் நீர் ரயிலின் உட்பகுதிக்குள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

500 ரூபாய் செலுத்தி ஆசனம் ஒதுக்கி சுதந்திரமாக பயணிக்க எதிர்பார்க்கும் பயணி ஒருவர் முழு இரவும் கழிப்பறை கழிவுகளுடனே பயணிக்க நேரிடும் சூழல் ஒன்று உருவாகியுள்ளது.

அத்துடன் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தை கண்டுபிடித்து கொள்ள முடியாத வகையில் ஆசனங்களில் பென்சிலில் கீறப்பட்டுள்ளமையினால் வயோதிபர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ரயில் பெட்டிகளுக்குள் உள்ள சிறிய பூச்சிகள் மற்றும் எறும்புகளினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like