இன்றைய ராசிபலன் 10-03-2018

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்: இன்று எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மிதுனம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை முக்கியமான விஷயத்தில் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

கடகம்: மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிரிகள் பணிந்துபோவார்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பது சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

சிம்மம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ அனுகூலம் உண்டாகும்.

கன்னி: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

துலாம்: அதிர்ஷ்டகரமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்: தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

தனுசு: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிட்டால், கைப் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் சமயோசிதமான யோசனை பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

மகரம்: இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தா லும், தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கும்பம்: மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

மீனம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலை யில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.