யாழ் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் முடக்கம்

நாளை முதல் யாழ் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் முடக்கமடையும் என யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.அதுமட்டுமன்றி இதுவரைக்கும் வழங்கப்பட்ட நீர் விநியோகம் கூட புதன்கிழமை நண்பகலுடன் நிறுத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ராமநாதன் நுண்கலைப்பீட பரீட்சையும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட காரணத்தால் திங்கட்கிழமை மட்டும் பல்கலை கழக செயற்பாடுகள் இடம்பெறும்.அதனை தொடர்ந்து ராமனாதன் நுண்கலைப்பீட அனைத்து பரீட்சைகளும் மற்றும் ஏனைய பீடங்களின் பரீட்சைகளும் விரிவுரைகளும் மறு அறிவித்தல் வரும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீர் விநியோகம் உணவு மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் ஊழியர் தொழிற் சங்கங்களின் போராட்டம் காரணத்தால் தடைப்படுவதால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும்.இதனை கருத்தில் கொண்டு, விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் விடுதியை விட்டு வீடுகளுக்கு சென்று அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் போது மீண்டும் பல்கலைக்கழகம் வருவது பொருத்தமாக இருக்கும், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.