வழமைக்கு திரும்புகிறது கண்டி

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த இனவாத வன்முறைகள் அனைத்தும் நேற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

கடந்த 4 ஆம் திகதி இரவு முதல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் உருவான வன்முறைகள் மற்றும் பதற்றநிலை நேற்றுக் காலை 6 மணியாகும் போது முற்றாக கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டதால், கண்டி மாவட்டம் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றது.

வன்முறைகளின் சேத விபரங்கள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் குறித்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக நேற்று முதல் ஆரம்பமாகின.

எவ்வாறாயினும் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக அங்கு தொடர்ந்தும் 2000 பொலிஸாரும் 750 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் ( எஸ்.ரீ.எப்.) 2500 இராணுவ வீரர்களும் 600 கடற்படை வீரர்களும் 30 விமானப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் தெரிவித்தனர்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசர கால சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபருக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் கண்டி மாவட்டம் முழுவதும் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கானது இன்று காலை 6.00 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இராணுவ தளபதி மேகேஷ் சேனநாயக்கவினால் மத்திய மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரால் ருக்மல் டயஸ் ஏற்கனவே நியமிக்கப்ப்ட்டிருந்த நிலையில், அவருக்கு மேலதிகமாக கட்டளை அதிகாரங்களை முன்னெடுக்கும் விதமாக மேஜர் ஜெனரால் நிசங்க ரணசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்ப்ட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

நேற்று காலை 6.00 மணிக்கு பின்னர் கண்டி மாவட்டத்தின் எந்த பகுதியிலும் குறிப்பிடத்தக்க எந்த வன்முறைகளும் பதிவாகாத நிலையில்இ நேற்று கண்டி நகரின் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்தன.

நேற்று முன் தினம் காலை முதல் இரவு வரை கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய, அம்பதென்ன, அக்குரன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் பதிவான நிலையில், நேற்று முன் தினம் இரவோடிரவாக பொலிஸார் வன்முறையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன் சமூக வலைத்தளங்கள் முர்றாக முடக்கப்ப்ட்ட நிலையில் வன்முறையஆளர்களின் தகவ;ல் பறிமாற்றம், ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்ட நிலையில் மேலதிக வன்முறைச்சம்பவங்கள் தவிர்க்கப்பட்டு கண்டி முழுவதும் பொலிஸ்இ இரானுவ கட்டுப்படடுக்குள் கொன்டுவரப்ப்ட்டது.

இதனால் நேற்று முழுவதும் அங்கு அமைதி நிலைமை நிலவியது. இதனையடுத்தே நேற்று முன் தினம் பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்ப்ட்ட 24 மணி நேர ஊரடங்கு 18 மணித்தியாலத்துடன் நிறிஅவுக்கு கொண்டுவரப்பட்டிருந்ததது.

எவ்வாறாயினும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலர்இ தமது உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்திருந்த நிலைமையையே நேற்றும் அவதனைக்க முடிந்தது. குறிப்பாக கட்டுகஸ்தோட்டை – நுகவல, என்டருதென்ன எனும் கிராமத்தில் வன்முறைகளால் பாதிக்கப்ப்ட்ட பல குழும்பங்கள் நிவாரணங்கள் எதுவுமின்றி அக்கிராமத்தின் பொது இடமொன்ரில் தங்கியிருப்பதாக கேசரிக்கு தகவல் கிடைத்தது. அங்கு தங்கியுள்ளோரில் கர்ப்பிணிகள், குழந்தைகளும் உள்ளதாகவும் இவர்கள் நேற்று முன் தினம் மார்ச் 7 ஆம் திகதி தககுதல்களால் பாதிக்கப்ப்ட்டவர்கள் எனவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில் கண்டி மாவட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்ப்ட்டுள்ள நிலையில், பிரதேசத்தின் அமைதியை உறுதி செய்யவும், சகவாழ்வை முன்னோக்கியதான வேலைத்திட்டங்க்லளை இன்று முதல் முன்னெடுக்கவும் திட்டமிடப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது