மாத்தளை, மஹியங்கனையில் பரவி வரும் அச்சநிலை

கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த இனக்கலவரம் இன்று மாத்தளை மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.

வியாழக்கிழமை மாலை தொடக்கம் மாத்தளை மற்றும் பதுளையின் பல்வேறு பிரதேசங்களிலும் குண்டர்களின் நடமாட்டம் வௌிப்படையாக அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் வதந்திகளைப் பரப்பி அச்சுறுத்தும் வழிமுறையொன்றையும் பேரினவாதக் குண்டர்கள் கையாண்டு வருகின்றனர்.

குறித்த வதந்திகளின் அடிப்படையில் மாத்தளை மாவட்டத்தின் உக்குவளையில் பள்ளிவாசல் மற்றும் எரிபொருள் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதாக பரவிய வதந்தி காரணமாக அப்பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை தோன்றியிருந்தது்

அதே போன்று மஹியங்கனை முஸ்லிம் கிராமத்தில் வீடொன்றும் லொறியொன்றும் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் காரணமாக அப்பிரதேசத்திலும் பதற்ற நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

The problem is spreading in Matale, Mahiyangana

Get real time updates directly on you device, subscribe now.

You might also like