இன வன்முறையை ஏற்படுத்திய 14 பேரின் மீது பாயும் அவசர கால சட்டம்!

கண்டி மாவட்டத்தில் இன வன்முறையை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட 14 பேர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.

அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை 14 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரூவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கொழும்பு புலனாய்வு பிரிவுக்கு கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி நிர்வாக நகருக்குள் ஏற்பட்ட பாரிய இன வன்முறையை அடுத்து, 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Emergencies-law-on-14-people-who-created-racial-violence!