ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் வெளிவரும் நிலையில், அவரின் கால்கள் வெட்டப்படவில்லை என கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

இவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான அய்யப்பன் ஆறுமுகசாமி கமிஷனில் இன்று ஆஜராகியுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுவது தவறானது. இறந்த பிறகு அவரது கால் கட்டை விரல்களை கட்டுவது போன்ற இறுதிச்சடங்குகளை நான் தான் செய்தேன்.

அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது நான் சென்று சந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் ஜெயலலிதா உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஜெயலலிதாவிடம் அய்யப்பன் 10 ஆண்டுகளாக ஓட்டுநராக பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.