பதற்றம் நிறைந்த கண்டியில் அதி தீவிர பாதுகாப்பு!! ட்ரோன் கமராக்களும் களத்தில்!! முப்படைகளும் உஷார் நிலையில்!!

கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையில் சட்டவிரோத ஒன்றுகூடல்களுக்கு எதிராக பொலிசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக பிரதேசத்தின் பல பாகங்களிலும் ட்ரோன் கமெராக்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் இராணுவ கவச வாகனங்களில் விசேட கமாண்டோ படைப்பிரிவின் இராணுவத்தினர் கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கண்டியில் முப்படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 850 இராணுவத்தினரும், 128 பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப்போச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், 250 இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேவை ஏற்படின் மேலதிக படையினரை ஏனைய பகுதிகளில் இருந்து அழைக்க முடியும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதனிடையே படையினருக்கும், பொலிஸாருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.