இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கும் மீனாக்ஷி கங்குலி!

இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரக்கால நிலை அவசியமின்றி நீடிக்கப்படக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கதிடம் வலியுறுத்தியுள்ளது.

அவசரக்கால நிலையின் கீழ் வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலைமை ஊடாக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படுதல் அவசியமாகும்.

எனினும், பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்தும் அபரிமித அதிகாராங்களை வழங்கும் ஒன்றாக அது அமைந்துவிடக்கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.