ஊரடங்கு சட்டம் தளர்வு! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கண்டி மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் தரப்பினரை உடன் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள 0711 261 261 என்ற அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை மேற்கொண்டு மக்கள் முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் இயங்கும் வகையில் இந்த சேவை நிலையம் செயற்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் காலை 10.00 மணியுடன் தளத்தப்பட்டு மீண்டும் இன்று மாலை வேளையில் அமுல்படுத்தப்படும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like