21 முஸ்லிம் நா.உறுப்பினர்களும் உடனடியாக ஒன்றிணைய வேண்டும்

இலங்கையில் கலவரம் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஒற்றுமைப் பட்டு வெளியேறினார்கள்” என்ற செய்தி உலகுக்கு பரந்து செல்ல வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையால் உலக அமைப்பின் நிதிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் மதஸ்தலங்கள் மீதான அத்துமீறல்களும் கண்டிக்கப்பட்டு சரியான விசாரணை மேற்கொள்ளப்படும்.

இதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் தயாராக வேண்டும்?

நாடாளுமன்றத்தினுள் சிரித்துக் கொண்டு அமர்வதில் எந்தப் பிரயோசனமும் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

மாறாக உங்கள் நடவடிக்கை உங்களை வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும் எஸ்.எல்.முனாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like