யாழில் இன்று காலை நடந்த சோகம் – தந்தையும் மகனும் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று காலை வடமராட்சி கரணவாய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக காவற்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் தொலைக்காட்சி  இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மின்சார தாக்குதலுக்கு இலக்கான தந்தையை காப்பாற்ற சென்ற மகனுக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. அதேவேளை தந்தையையும், சகோதரனையும் காப்பாற்ற முயன்ற மற்றுமொரு மகன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில்  அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் 50 வயதுடைய ஜெகனாந்தன், 29 வயதுடைய சஞ்சீவன் ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like