காதல் பிரிவு ஏற்பட்டால் இந்த ராசிக்காரர்கள் இப்படிதான் பீல் பண்ணுவாங்கலாம்- நீங்க எப்படி??

மேஷம்
முகத்தில் ஓங்கி குத்தியது போல உணர்வீர்கள். உங்கள் வாகனம் அல்லது உங்களுக்கு உரிய பொருளை பயங்கரமாக தூக்கிப்போட்டு உடைப்பீர்கள்.

ரிஷபம்
எளிதாக பிரிந்துவிட முயலாத அல்லது முனையாத நீங்கள், பிரிவை சந்திப்பது கடினம் தான். ஒருவேளை பிரிந்துவிட்டால், உங்கள் பாதையில் சாந்தமாக சென்றுவிடுவீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை புரிந்துக் கொள்வது சற்று கடினம். சற்று க்ரேசியான இவர்கள். முதலில் தனியாக நடக்க துவங்குவார்கள். பழைய புகைப்படங்களை கண்டு வருந்துவார்கள். பிறகு அனைத்தையும் மறக்க எங்காவது பயணம் மேற்கொண்டு திரும்புவார்கள்.

கடகம்
பெரிதாக கவலைப்பட மாட்டார்கள். உண்மையில் கவலைப்படுவதை போல கான்பித்துக்க் கொள்ள மாட்டார்கள். நாங்க ஓகே தான் என்பது போல இருக்கும் இவர்கள். ரகசியமாக அந்த நபர் நாசமாப் போகட்டும் என குமுறுவார்கள்

சிம்மம்
முதலில் வருந்துவார்கள். உலகிலே தனிமையில் விடப்பட்டது போல உணர்வார்கள். ஆனால், ஆளுமை மற்றும் தலைமை குணம் கொண்ட இவர்கள், தங்கள்வாழ்க்கை, குடும்பத்தை பற்றிய சிந்தனையில் மீண்டும் முனைப்புடன் செயல்பட துவங்கிவிடுவார்கள்.

கன்னி
உணர்வுகளை சமநிலைப்படுத்த தெரிந்தவர்கள் கன்னி ராசிக்காரர்கள். சோகமாக இருப்பது போல டிராமா போடா தெரியாதவர்கள். தாங்கள் செலவு செய்ததை, கொடுத்த பரிசுகளை திரும்ப கேட்க மாட்டார்கள். போனால் போகட்டும் போடா என நடையைக் கட்ட துவங்கிவிடுவார்கள்.

துலாம்
சாந்தமான மனப்பாங்கு கொண்ட இவர்கள் எதையும் செயற்முறையாக தான் யோசிப்பார்கள். பழையது கழிதலும், புதியன புகுதலும் இயல்பு என நடந்ததை மறந்து புதிய வாழ்க்கையை வாழ துவங்கிவிடுவார்கள்.

விருச்சிகம்
இவர்களாக பிரியவும் முனைய மாட்டார்கள், பிரிந்தாலும் பெரிதாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், உங்களுடன் இருக்கும் நபர்களையே உங்களுக்கு எதிராக மாற்றிவிடுவார்கள். கொஞ்சம் விஷம் தான் இவங்க.

தனுசு
எதற்கும் சாட்சியாக இருக்க மாட்டார்கள். முடிந்த வரை உறவில் பிரிவு உண்டாகாமல் இருக்க முயற்சிப்பார்கள். ஒருவேளை இவர்களை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணைய விரும்பினால் அதற்கு எப்போதும் “நோ” சொல்லி விலகிவிடுவார்கள்.

மகரம்
முடிந்தவரை உறவில் பிரிவு உண்டாகாமல் இருக்க முயற்சிப்பார்கள். சொல்வதை சுத்தமாக கேட்காமல் பிரிந்து போனால். சில நாள் வருந்துவார்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக மீண்டும் வாழ துவங்கிவிடுவார்கள்.

கும்பம்
எல்லாம் தலைவிதி, நடப்பது நடக்கட்டும் என நடையைக்கட்டுவார்கள்.

மீனம்
தங்கள் உலகத்தை, மகிழ்ச்சியை தாங்களாக அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட மீன ராசிக்காரர்கள். சுமுகமாக பிரிந்திவிடுவார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.