நீங்க இந்த ராசிபெண்களையா திருமணம் செய்யப்போறீங்க- அப்போ அவ்வளவுதான் உங்க வாழ்க்கை!!

ஜாதகம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் காலங்கள் செல்ல சில ஜோடிகளின் வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்படும்.

அதற்கு காரணம் அந்தந்த ராசிக்குரியவர்களின் குணாதிசயங்களே ஆகும். அது ஒரு கட்டத்தில் ஒத்துவராத பட்சத்தில் பிரிவு ஏற்படுகிறது.

மேஷம் மற்றும் கடகம்
ஆரம்பத்தில் இவர்களின் உறவில் மிகப்பெரிய ஆர்வம் நிறைந்திருக்கும். பார்த்த முதல் நாளே….என்பது போல், கண்டதும் காதல் உண்டாகி, அவர்கள் மூளை வேறு எதை பற்றியும் யோசிக்க முடியாமல், இவர்கின் உறவு திருமண பந்தத்தில் முடியும்.

ஒரு காலகட்டத்திற்கு மேல் இவர்களின் அன்பில் மாற்றம் ஏற்படும். இது உண்மையான காதல் அல்ல வெறும் மோகம் மட்டுமே என்பதை உணர இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது.

ஒருவரை மற்றவரோடு இணைக்க எந்த ஒரு காரணமும் இல்லாமல் போகும் காலம் கூட வரலாம். ஆகவே இவர்கள் உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

ரிஷபம் மற்றும் தனுசு
எதிர் துருவங்கள் ஈர்க்கப்படலாம் என்பதற்கேற்ப தொடக்கத்தில் இந்த இரண்டு ராசிக்காரர்களும் அவர்களின் வித்தியாசம் காரணமாக கவரப்படுகிறார்கள். முற்றிலும் வித்தியாசமான குணங்கள் கொண்ட இருவரையும் இணைப்பது இந்த வேறுபாடு மட்டுமே.

விரைவில் இதுவே இவர்களின் தொல்லைகளுக்கும் காரணமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் எப்போதுமே தீர்மானிக்க முடியாதவர்களாகவும், சாகசத்தை விரும்புபவருமாக இருப்பார்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் , எதிலும் நிதானமாக நிரந்தரமாக இருப்பார்கள். ரிஷப ராசிக்கார்கள் தனுசி ராசிக்காரர்களை கட்டுப்படுத்த நினைப்பார்கள். ஆனால் நான் யாருக்கும் அடிமை இல்லை என்ற சுபாவம் கொண்ட தனுசு ராசிக்கார்கள் இதனை ஏற்க மறுக்கலாம்.இதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது.

மிதுனம் மற்றும் மீனம்
உணர்ச்சிகளில் ஆழமானவர்கள் மீன ராசிக்காரகள். ஆனால் மிதுன ராசிக்காரகள் எல்லாவற்றையும் மிகவும் லேசாக, மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள்.

மீன ராசிக்கார்களின் உள்ளார்ந்த படைப்பாற்றல் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் அவர்கள் மீது ஈர்க்கப்படலாம். ஆனால் இந்த கவர்ச்சி அவர்களை நீண்ட காலம் அழைத்துச் செல்லாது.

உற்சாக இயல்பு கொண்ட மிதுன ராசிக்காரர்கள் மீன் ராசிக்காரர்களுடன் இணைந்து வாழ முடியாது. அவர்களுக்கு பொறமைக் குணம் எளிதில் தென்படும்.

கடகம் மற்றும் மகரம்
உணர்வுகள் மற்றும் பாலியல் பொருத்தம் மிக அதிகமாக இருக்கும் இந்த ஜோடி நெருக்கமாக உணர்வதற்கும் இதுவே காரணம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் அவர்கள் மத்தியில் பாலியல் உணர்வைத் தாண்டி வேறு ஒரு பொதுவான குணமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

இவர்களுக்கு இடையில் பொதுவாக வேறு எந்த பிரச்சனையும் இல்லாதபோதும், மற்றவர்களைப் போல் இவர்கள் சந்தோஷமாக வாழவில்லை என்ற எண்ணம் இவர்களுக்கு அடிக்கடி தோன்றும்.

சிம்மம் மற்றும் கன்னி
சிம்ம ராசிக்கார்கள் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர்கள். இதற்குக் காரணம், இவருக்கு இருக்கும் நளினம் மற்றும் தன்னம்பிக்கை. கன்னி ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஊக்கமுள்ளவர்கள்.

இந்த பண்பு சிம்ம ராசிக்கார்களுக்கு மிகவும் பிடிக்கும். கன்னி ராசிக்கார்கள் தான் சரியாக நடக்கும் சூழ்நிலையில் சிம்ம ராசிக்கார்களின் குற்றங்களை விமர்சித்து பேச முயற்சிப்பர்.

சிம்ம ராசிக்காரர்கள், தங்களை குறை சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாதவர். இதனால் இவர்களின் உறவில் உராய்வு ஏற்படுகிறது.

கன்னி மற்றும் மேஷம்
கன்னி ராசிக்காரர்கள் கிளர்ச்சி மற்றும் சாகச உணர்வுகள் நிறைந்தவர். கன்னி ராசிக்காரர்கள் விரைந்து மேஷ ராசிக்காரர்களிடம் காதல் வசப்படுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் எதையும் நிதானமாக யோசித்து தகுந்த தயாரிப்புடன் எந்த ஒரு காரியத்திலும் இறங்குவார்கள்.

அதுவே மேஷ ராசிக்காரர்கள், வாழ்க்கை வரும் வழியில் பயணம் செய்ய விரும்புவார்கள். மேஷ ராசிக்கார்களின் தன்னிச்சையான மனோபாவம், இவருடைய வாழ்க்கை அணுகுமுறையோடு ஒத்து வராது என்ற முடிவிற்கு சில நாட்களில் வரலாம்.

துலாம் மற்றும் மகரம்
துலாம் மற்றும் மகர ராசிகார்கள் ஒருவரை ஒருவர் அதிகம் கவரும் குணங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் நீண்ட நாள் வாழ்க்கையில் இவர்களின் ஜோடிப் பொருத்தம் ஒத்து வராது.

துலாம் ராசிக்காரர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் எதையும் சீராக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

துலாம் ராசிக்காரர் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சோம்பேறிகளாக இருப்பதால் இவர்களுக்கு இடையில் சர்ச்சை தொடங்கும். இருவருக்கும் தனித்தனி வழியைத் தேர்ந்தெடுப்பதே இந்த ஜோடிக்கு நல்லது.

விருச்சிகம் மற்றும் தனுசு
மனம் போன போக்கில் இந்த இரண்டு ராசிக்கார்களும் ஒன்றாக இணைவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பேச்சை இவர்கள் காதில் கூட வாங்குவதில்லை.

விருச்சக ராசிக்காரர்கள் மிகவும் பொசசிவ் எண்ணம் கொடிப்ருப்பார்கள். தன் துணை தன்னுடன் மட்டுமே பொழுதை கழிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் . இவர்களுக்கு வீட்டில் இருப்பது மிகவும் பிடிக்கும்.

இதையே இவர்கள் துணையிடமும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுசு ராசிக்காரர்கள் வெளி உலகத்தை விரும்புபவர்கள். ஆகவே விருச்சிக ராசிக்காரர்களின் கெடுபிடி இவர்களுக்கு அறவே பிடிக்காது.

தனுசு மற்றும் கடகம்
நண்பர்கள் மத்தியில் கிசுகிசு மற்றும் நாடகத்தன்மை நிறைந்த ஜோடிகளாக இவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே கட்டுப்படுத்தும் பண்பு உண்டு.

இருவருமே கிளர்ச்சியாளர்கள். சில ஆழமான மற்றும் அன்பான தருணங்கள் இவர்களுக்கு வாய்த்தாலும் , ஒருவரை ஒருவர் ஏமாற்றும் தன்மையால் இவர்களின் உறவில் பாதிப்புகள் தோன்றும். இந்த குணத்தால் இருவரும் வேறு வேறு பாதையை தேர்வு செய்ய நேரலாம்.

மகரம் மற்றும் மீனம்
இவர்களின் இணை ஒப்ரு சக்திமிக்க இணையாகும். அனைவரும் பார்த்து வியக்கும் ஒரு ஜோடியாக இவர்கள் திகழ்வார்கள். ஒரு சமூகக் குழுவில் அனைவரும் மரியாதை கொடுக்கக்கூடிய ஒரு இணையாக இவர்கள் இருப்பார்கள்.

மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையை ப்ராக்டிகலாக பார்க்கும் தன்மை கொண்டவர்கள். மீன ராசிக்காரர்கள், விசித்திரமான மற்றும் படைப்பாற்றலுடன் கூடிய ஒருவர்.

இந்த மாறுபட்ட குணங்களை சமநிலையில் வைத்து பார்க்கும் குணம் உள்ளவராக இருந்தால் வாழக்கை நன்றாக பயணிக்கும் . இல்லையென்றால் சிக்கல் ஏற்பட்டு, இருவரும் பிரிய நேரலாம்.

கும்பம் மற்றும் சிம்மம்
நல்ல ஜோடி வரிசையில் இவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. இரண்டு ராசிகளுக்கும் இருக்கும் ஒரு தனித்துவமான கவர்ச்சி ஒருவரின் கவனத்தை மற்றவர் மேல் செலுத்த வைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் , தன்னுடைய துணை எப்போதும் தன்மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதே சமயம் கும்ப ராசிக்காரர்கள், மிக நுட்பமான விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும். இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய தனித்தனி பார்வைகள் இருக்கும்.

மீனம் மற்றும் மேஷம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானவர்கள் . மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள். ஆனால் மேஷ ராசிக்காரர்கள், தடாலடியாக நடப்பவர்கள்.

இந்த குணங்கள் இவர்கள் உறவில் விரிசலை உண்டாக்கலாம். தனது துணை கூறும் விஷயங்களை ஏற்றுக் கொள்ளலாமல் இருக்கும்போது இருவருக்குள்ளும் பிரச்சனை உண்டாகிறது.