சட்டவிரோத கேபிள் இணைப்பாளருக்கு தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை

யாழில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி பெறாது சட்டவிரோத கேபிள் இணைப்புகளை வழங்கிவந்த தனியார் நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில்.நேற்று மாலையிலிருந்து குறித்த சட்டவிரோத கேபிள் வழங்குனர் மீண்டும் கேபிள் இணைப்புகளை வழங்க ஆரம்பித்துள்ளார் இது தொடர்பான முறைப்பாடு தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரி.சட்டவிரோத கேபிள் இணைப்புகளை வழங்கும் முகவர்களை கடும் தொனியில் எச்சரித்துள்ளதோடு.மிகவிரைவில் திடீர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவ் சோதனை நடவடிக்கையில் சட்ட விரோதமாக கேபிள்இணைப்புகளை வழங்குனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் எனவும் தெரிவித்தார்.