இன்றைய ராசிபலன் 27-05-2018

மேஷம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.
ரிஷபம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படக்கூடும். திடீர் செலவுகளால் சிலர் கடன்படவும் நேரிடும். தந்தை வழியில் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்கவும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
மிதுனம்: மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையை நிறைவேற்றுவார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
கடகம்: திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
சிம்மம்: கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி: எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன், அதனால் உடல் அசதி உண்டாகும். உங்கள் முயற்சிக்கு சகோதரர் ஒத்துழைப்புத் தருவார். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.
துலாம்: தேவையான பணம் இருந்தாலும் வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டியது அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
தனுசு: தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அதனால் உங்களுக்கு மறைமுக ஆதாயம் உண்டா கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை அமோகமாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மகரம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்கள் கேட்ட உதவியைச் செய்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.
கும்பம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.
மீனம்: காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாள்களாகப் பார்க்காமல் இருந்த தாயைப் பார்க்கவும், அவருடைய தேவையை நிறைவேற்றவும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

Get real time updates directly on you device, subscribe now.