தண்டவாளத்தில் புதையுண்ட டிப்பர்- வந்து மோதியது தொடருந்து- போக்குவரத்து தடை!!

தொடருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானியது. இந்த விபத்து வவுனியா ஒமந்தையில் நேற்று மாலை நடந்துள்ளது.

ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர், தொடருந்துத்  தண்டவாளத்தில் புதையுண்டது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்து டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தொடருந்து
பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டு டிப்பர் வாகனத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினர். விபத்துக் காரணமாக சுமார் 30 நிமிடங்களின் பின்னரே தொடருந்து மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like