ஆசி­ரி­யர் மீது குற்­றச்­சாட்டு- இட­மாற்­று­மாறு பரிந்­துரை -வலய அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­ !!

கிளி­நொச்­சி­யில் உள்ள பாட­சாலை ஒன்­றில் விஞ்­ஞான பாடம் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மாணவி ஒரு­வ­ரி­டம் சேட்டை புரிய முனைந்­தார் என்று குற்­றஞ்­சாட்டி முறை­யி­டப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்­துக் குறித்த ஆசி­ரி­யரை வெளி­மா­வட்­டத்­துக்கு இடம்­மாற்­று­மாறு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழமை காலை இடம்­பெற்­றுள்­ளது.
“முறைப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் குறித்த மாண­வி­யின் வீட்­டுக்­குச் சென்று விசா­ரணை நடத்­தி­னோம். இது தொடர்­பான விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

தாப­நி­திக் கோவை அத்­தி­யா­யம் 2 விதி 48 அமைய ஒழுக்­காற்று விசா­ர­ணை­யின்­படி மாவட்­டத்­துக்கு வெளியே இட­மாற்­றம் செய்­யு­மாறு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­துக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளேன்” என்று கிளி­நொச்சி வயக்­கல்வி பணிப்­பா­ளர் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் வலி.வடக்­கில் மாண­வி­யு­டன் தவ­றாக நடந்­து­கொண்ட குற்­றச்­சாட்­டில் பாட­சாலை ஆசி­ரி­யர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இந்த நிலை­யில் கிளி­நொச்­சி­யில் இது இடம்­பெற்­றது.