அழகு நிலையத்திற்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட்டு!

வவுனியாவில் அழகு நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பணம் உட்பட்ட பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இறம்பைகுளம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் நேற்று இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள் அழகு நிலையத்தின் பின்வாயிலை உடைத்து உள்ளே நுழைந்து 82 ஆயிரம் ரூபாய் பணம் பெறுமதியான மடிகணணி, மற்றும் ரப், என்பவற்றை திருடிசென்றுள்ளனர்.

இன்று காலை வர்தக நிலையத்திற்கு சென்ற உரிமையாளர் கதவு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கும் தெரியபடுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அருகில் உள்ள ரகசிய கமெராக்களின் உதவியுடன் குற்றவாளியை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்,

Get real time updates directly on you device, subscribe now.

You might also like