தொடருந்து ஊழியர்கள்- நாளை வேலைநிறுத்தம்!!

சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தொடருந்து தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

நாளை மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தொழிற்சங்கக் குழு  தலைவர் பீ.சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.