சிறுவன் அடித்துக் கொலை- நண்பர்கள் கைது!!

12 வயதுச் சிறுவனை, அவனது நண்பர்கள் சூவர் இணைந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கே.பெருமாள்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவனான கவின்குமார், தனது நண்பர்களுடன் ஊருக்கு அருகிலுள்ள கண்மாய்க்குக் குளிக்கச் சென்றுள்ளான்.

குளிக்கச் சென்ற கவின்குமார் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், கண்மாய் நீரில் உடலில் காயங்களுடன் அவனை உறவினர்கள் சடலமாக மீட்டுள்ளனர்.

இதுகுறித்து உத்தமபாளையம் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கவின்குமாருடன் சென்ற சக சிறுவர்களே அவனை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று சிறுவர்களைப் பொலிஸார் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like