சம்மாந்துறையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காட்டில் கேரளா கஞ்சா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் கேரள கஞ்சா வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வதாகவும் புல்மோட்டைப் பகுதியிலிருந்து கல்முனைக்கு கொண்டுவரப்படுகிறது.

அங்கிருந்து பல பகுதிகளுக்குப் பிரிவதாக புல்மோட்டையிலிருந்து கடல் மார்க்கமாக வருவதாகவும் பெரும் தெருக்களில் குடும்பங்கள் பிரயாணம் செய்யும் சொகுசு வாகனங்களில் எடுத்து வருவதாக தகவல் கிடைத்து.

இதனையடுத்து சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்னு அன்ஸர் மேலும் தெரிவிக்கையில்,

என்னுடன் ரத்நாயக்க, பொலிஸ் சாஜன்ட் விஜயவர்த்தன,பொலிஸ் சாஜன்ட் லத்திப்,பொலிஸ் கொஸ்தாபர் சந்திரஜீவ,பொலிஸ் கொஸ்தாபர் கேரத், பொலிஸ் கொஸ்தாபர் சுதந்திரராஜா,பொலிஸ் கொஸ்தாபர் சாரதி கெட்டியாராட்சி என்பவர்களுடன் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டோம்.

இதன் போது, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 18ம் 19ம் வயதிற்குட்பட்ட இருவர் மில்லி கிராம் 1,50,000 ஆயிரம் ரூபா பெறுமதியான பார்சல் கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிலில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள்.