பௌத்த பிக்குவும் சாரதியும் சேர்ந்து யுவதிக்கு செய்த கொடூரம்……!

ஹிக்கடுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி யுவதி ஒருவருக்கு மதுபானம் பருக கொடுத்து பிக்குவும் அவருடைய சாரதியும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் காலி, ஊரகஸ் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தெளிகடை சுனந்தாராமய விகாரையில் வசித்து வரும் 26 வயதான மான்பிட்டியே சிறிசுமண என்ற பிக்குவும் அவரது சாரதியுமே ஊரகஸ்சந்தி பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த யுவதி சாரதியின் நண்பி என பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள், யுவதியை தமது காரில் அழைத்துச் சென்றுள்ளதுடன் யுவதிக்கும் மதுபானத்தை பருக கொடுத்து சந்தேக நபர்களும் மதுபானம் பருகியுள்ளனர்.

இதனையடுத்து இரவு ஒரு மணியளவில் யுவதியை காரில் அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த போது, யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த யுவதி காரின் ஸ்டேரிங்கை சுழற்றியுள்ளார். இதனால் கார் வீதியை விட்டு விலகி பத்தை ஒன்றுக்குள் விழுந்துள்ளது.

இதனையடுத்து பிக்குவும் சாரதியும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகள் யுவதியை மீட்டு தெலிகடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கவிதை வடிவில் தர்ம உபதேசம் செய்வதில் பிரபலமான குறித்த பிக்குவும் அவரது சாரதியும் தெலிகடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தலா 2 லட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ள நீதவான் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like