அக­ழப்­பட்ட மண்­ணில் மனித எலும்­பு­கள் – மன்­னார் சதோச வளா­கத்­தில் அகழ்வு ஆரம்­பம்!!

மன்­னார், லங்கா சதோச வளா­கத்­தில் அக­ழப்­பட்ட மண்­ணில் மனித எலும்பு எச்­சங்­கள் காணப்­பட்­டதை அடுத்து அந்த வாளா­கத்­தில் நேற்று அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன.

மன்­னார் நீதி­வான் ஏ.ஜீ.அலெக்ஸ்­ராஜா முன்­னி­லை­யில் இந்த அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன.

அந்­தப் பகு­தி­யில் சேக­ரிக்­கப்­பட்ட மண்­ணில் மதி­யம் 1.30 மணி­ய­ள­வில் முதற்­கட்ட அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. அதில் சந்­தே­கத்­துக்கு இட­மான எலும்பு எச்­சங்­கள், பற்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

அகழ்­வுப் பணி­கள் பிற்­ப­கல் 4.15 மணி­ய­ள­வில் அங்கு நிறுத்­தப்­பட்டு, பி.ப. 4.30 மணி­ய­ள­வில் மன்­னார் நகர நுழை­வா­யி­லுக்கு அண்­மை­யில் உள்ள லங்கா சதோச வளா­கத்­தில் முதல்­கட்ட அகழ்­வுப் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்த அகழ்­வுப் பணி­கள் பி.ப. 5 மணி­ய­வில் நிறை­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டன. இன்­றும் அகழ்­வுப் பணி­கள் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிறப்பு சட்ட மருத்­துவ நிபு­ணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜ­பக்ச தலை­மை­யி­லான குழு­வி­ன­ரும், களனி பல்­க­லைக் கழ­கப் பேரா­சி­ரி­யர் ராஜ் சோம தேவா தலை­மை­யி­லான குழு­வி­ன­ரும் அகழ்­வுப் பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

சட்­டத்­த­ர­ணி­க­ளான வி.எஸ்.நிறஞ்­சன், திரு­மதி ரனித்தா ஞான­ராஜ், சிறப்பு தட­வி­யல் நிபு­ணத்­து­வப் பொலி­ஸார், அழைக்­கப்­பட்ட திணைக்­கள அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரும் சம்­பவ இடத்­தில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­த­னர்.