தப்பியோடிய கைதிகள் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு – ஒருவர் கைது- ஐவர் தப்பியோட்டம்- பொலிஸார் சுற்றிவளைப்பு!!

பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்த போது ஆறு கைதிகள் நேற்றுத் தப்பிச் சென்றனர்.

அவர்களை கைது செய்ய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

இன்று காலை தப்பிச் சென்ற கைதிகளுள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய ஐவரை தோடும் பணிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.