மட்டு. அரசாங்க அதிபரால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரணப் பொருள்களைச் சேகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்கள்,  அரச திணைக்களத் தலைவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதேச பொது மக்கள், அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து நிதியுதவி, உலர் உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள், பால்மா பக்கட்டுகள், குடிநீர் போத்தல்கள் போன்ற நிவாரணப் பொருள்களைச் சேகரித்து மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 2018.06.01ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறும் பழுதடையக் கூடிய பொருள்களைச் சேகரிக்க வேண்டாம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருட்களைக் கையளிப்பது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், மட்டக்களப்பு தொலைபேசி இல. 065-2227701, 0773957885 மற்றும் நிருவாக உத்தியோகத்தர் 065-2222365, 0779000880 தொடர்புகளை ஏற்படுத்தி பொருட்களைக் கையளிக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட அரச ஊடகப்பிரிவுத் தகவல் அறிவிக்கின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like