ஏழு வருடங்களுக்கு முன்பு அந்த மோசமான நாளை மட்டும் என்னால் மறக்கவே முடியாது.,வருத்தத்தில் சௌந்தர்யா ..!

தனுஷ் தயாரிப்பில் இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வெளிவர  இருக்கும் படம் ‘காலா’. இப்படம் ஜூன் 7ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல், காலா படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எமோஜி நேற்று  வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த நாளையும் 7 வருடங்களுக்கு முன்பு இதே நாளையும் என்னால் மறக்க முடியாது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதில் 7 வருடங்களுக்கு முன்பு 28-5-2011 அன்றைய தினத்தில் அப்பா உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். கடவுளின் அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் சில தினங்களில் உயிர் திரும்பினார்.

மக்களின் பிரார்த்தனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. 7 வருடங்களுக்கு பின்பு இன்று உங்கள் அன்புடன் காலா கொண்டாட்டம்’ என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது த்விட்டேர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like