திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பொறுப்பேற்பு!

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (30) உத்தியோகபூர்வமாக கடமையயை பொறுப்பேற்றார்.

” கிழக்கில் மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயுதம் தாங்கிய பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள் .சட்டத்தரணிகள் ஊழியர்கள் என பலரும் சேர்ந்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

அத்துடன் தமது கடமையயை பொறுப்பேற்றதுடன் இரண்டு மணித்தியாலங்கள் சிநேகபூர்வமாக தமது நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பாகவும், நீதிமன்றங்களின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்துக்களை கூறினார்.

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like