பந்தை பறக்க விட்ட கெய்ல்… சூப்பர் மேனாக மாறிய மெக்கல்லம்! தொப்பியால் வீண்

ஐபிஎல் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது..

இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணித்தலைவர் ரெய்னா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் துடுப்பாடியது.

இதில் ஜடேஜா வீசிய போட்டியின் 7வது ஓவரின் கடைசி பந்தை கிறிஸ் கெய்ல் சிக்சர் நோக்கி விளாசினார். பாய்ந்து வந்த பந்தை பவுண்டரி கோட்டில் நின்றிருந்த பிராண்டன் மெக்கல்லம் ஒற்றை கையில் பறந்து பிடித்து மிரள வைத்தார்.

அவுட் கொடுக்கப்பட்டு கெய்லும் பெவிலியன் திரும்பி கொண்டிருந்த நிலையில் திடீரென சந்தேகமடைந்த நடுவர், அந்த கேட்சை பரிசீலித்து பார்த்ததில் மெக்கல்லம் தலையில் அணிந்திருந்த தொப்பி பவுண்டரி கோட்டில் உரசியது தெரியவந்தது,.

இதனால், அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டு கேட்சிலிருந்து தப்பிய கெய்ல், அதிரடியாக விளையாடி 77 ஓட்டங்கள் குவித்தார்.

மெக்கல்லம் முயற்சியை பாராட்டும் வகையில் எதிரணி தலைவரான விராட் கோஹ்லி மெக்கலம்மிற்கு கைகொடுத்தார் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.