மட்டு. நகரில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் கிராமத்தில் இன்று அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதிக்கல் கிராமவாசியான குழந்தைவேல் குருசாந்தராசா (வயது – 40) என்பவரே அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.