யாழ்ப்பாணம் மத்தி கிண்ணம் வென்றது

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான மேசைப்­பந்­தாட்­டத் தொட­ரில் 17 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து அராலி சரஸ்­வதி மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

முத­லா­வது ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ண ம் மத்­திய கல்­லூரி அணி­யின் சார்­பில் சியாம்­ராஜ், அராலி சரஸ்­வதி மகா வித்­தி­யா­லய அணி­யின் சார்­பில் விஜ­ய­ராஜ் இரு­வ­ரும் மோதி­னர். 11:08, 11:07, 11:02 என்ற புள்­ளி­ க­ளின் அடிப்­ப­டை­யில் முதல் மூன்று செற்­க­ளை­யும் கைப்­பற்­றி­னார் சியாம்­ராஜ்.

இரண்­டா­வது ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி­யின் சார்­பில் சதுர்­சன், அராலி மகா வித்­தி­யா­லய அணி­யின் சார்­பில் டிலக்­சன் இரு­வ­ரும் மோதி­னார்கள். 11:7, 12:10, 11:2 என்ற புள்­ளி­க­ளின் அடிப் ப­டையில் சதுர்­சன் வெற்­றி­பெற்­றார்.

மூன்­றா­வது ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி­யின் சார்­பில் சஞ்­சேய், அராலி சரஸ்­வதி மகா வித்­தி­யா­லய அணி­யின் சார்­பில் யது­சன் இரு­வ­ரும் மோதி­ னர்.

11:02, 11:18, 11:05 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் சஞ்­சேய் வெற்­றி­பெற்­றார். இதை­ய­டுத்து 3:0 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி.

Get real time updates directly on you device, subscribe now.