முல்லைத்தீவு இளை­ஞனை கொலை செய்து கடித்த நபர்- மறியலுக்குள் சந்­தே­க­ந­பர்!!

முல்­லைத்­தீவு, செல்­வ­பு­ரத்­தில் கடந்த 23ஆம் திகதி இளை­ஞர் ஒரு­வர் வெட்­டிக் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்­த­வர் என்று முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கடந்த 23 ஆம் திகதி செல்­வ­பு­ரத்­தில் உள்ள பனங்­கூ­டல் ஒன்­றுக்­குள் இளை­ஞர் ஒரு­வ­ரின் உடல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. கள்­ளப்­பாடு வடக்­கைச் சேர்ந்த வ.சதா­நி­சன் (வயது – 27) என்­ப­வரே கொலை செய்­யப்­பட்ட நிலை­யில் காணப்­பட்­டார். சம்­பவ இடத்­துக்­குச் சென்ற பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­னர்.

உடற்­கூற்று சோத­னை­யில் தக­வல்
சம்­பவ இடத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களை அடுத்து உடல் உடற்­கூற்­றுச் சோத­னைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பட்­டது. கழுத்­தில் கூரிய ஆயு­தத்­தால் வெட்­டப்­பட்டு, அதி­க­ள­வான குரு­திப்­போக்­கால் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டமை மருத்­துவ அறிக்­கை­யில் தெரி­ய­வந்­தது. உயி­ரி­ழந்­த­வ­ரின் வயிற்­றில் கடி­கா­யம் ஒன்று காணப்­பட்­டது. அது பொலி­ஸா­ரின் கவ­னத்தை ஈர்ந்­தது.

துரித விசா­ரணை
கிடைத்த தக­வல்­க­ளைக் கொண்டு சிறப்பு பொலிஸ் அணி களத்­தில் இறங்­கி­யது. முல்­லைத்­தீவ மாவட்ட பொலீஸ் அதி­காரி வசந்த கந்­தே­வத்த, உதவி பொலீஸ் அத்­தி­யட்­ச­கர் மயூ­ரப்­பெ­ரேரா தலைப்­பொ­லீஸ் பரி­சோ­த­கர் லால் சந்­தி­ர­சிறி ஆகி­யோ­ரின் ஆலோ­ச­னை­யு­டன், பெருங்­குற்­றப் பிரிவு பொறுப்­ப­தி­காரி எச்.கே.கங்­கா­நாத் தலை­மை­யில் பொலீஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளான சுபாஸ், கரு­ணா­ரெத்­தின, சம­ர­சிங்க, எம்.சுரேன்­ராஜ், வாசனா, கே.நிரூ­யன், ஆர்.கரு­ணா­ரத்ன, லக்­மல் ஆகி­யோர் கொண்ட அணி விசா­ர­ணைளை ஆரம்­பித்­தது. உயி­ரி­ழந்­த­வ­ரின் உட­லில் காணப்­பட்ட கடி காயம் தொடர்­பில் அவர்­கள் அவ­தா­னம் செலுத்­தி­னர்.

காட்­டிக் கொடுத்த கடி­கா­யம்
யாரே­னும் கடித்­தமை தொடர்­பாக முறைப்­பா­டு­கள் முன்­னர் கிடைத்­துள்­ள­னவா என்­பது தொடர்­பில் பொலிஸ் குழு தேடு­தலை ஆரம்­பித்­தது. அவர்­க­ளுக்கு அதில் ஒரு தக­வல் கிடைத்­தது. போதை­யால் ஏற்­ப­டும் குடும்­பத் தக­ரா­றில் கடித்­தார் என முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­மையை அவர்­கள் கண்­ட­றித்­த­னர். அந்த நப­ரைப் பொலிஸ் குழு கண்­கா­ணிக்க ஆரம்­பித்­தது.

கைது
செல்­வ­பு­ரத்­தைச் சேர்ந்த அந்த நப­ரைத் தேடிச் சென்­ற­போது அவர் அங்கு இல்லை. சந்­தே­ந­க­பர் முல்­லைத்­தீ­வுக்கு வந்­துள்­ளமை தொடர்­பில் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் கிடைத்­தது. கண்­கா­ணிப்பை அதி­க­ரித்த பொலி­ஸார் நேற்று முல்­லைத்­தீ­வில் இருந்து வட்­டு­வா­கல் பாலம் ஊடாக நடத்து சென்று கொண்­டி­ருந்த சந்­தே­க­ந­பரை வளைத்­துப் பிடித்­த­னர்.

ஆதா­ரங்­கள் மீட்பு
கைது செய்­யப்­பட்­ட­வ­ரி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் தலைக்­க­வ­சம், பணப்பை, கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறப்­ப­டும் கத்தி போன்­ற­வற்றை மீட்­டுள்­ள­னர். உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் கழுத்­தில் இருந்த தங்­கச் சங்­கி­லியை அறுத்து யாழ்ப்­பா­ணம் சுன்­னா­கத்­தில் உள்ள அவ­ரது அக்­கா­வி­டம் அடைவு வைத்­துத் தரு­மாறு கூறிக் கொடுத்­துள்­ளார் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

அக்­கா­வும் கைது
இந்­தத் தக­வல்­களை அடுத்து கொலை மற்­றும் கள­வுக்கு உத­வி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் மின்­சார நிலைய வீதி, சுன்­னா­கத்­தில் வசிக்­கும் அவ­ரது அக்­கா­வும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ரி­டம் இருந்து உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் தங்­கச் சங்­கிலி மீட்­கப்­பட்­டுள்­ளது.

மறி­யல்
இரு சந்­தே­க­ந­பர்­க­ளும் நேற்று முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை எதிர்­வ­ரும் 4 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார். மேல­திக விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.