பற்­றி­ஸில் துருப்­பி­டித்த ஆணி: வியா­பா­ரிக்கு ரூ.5000 தண்­டம்!!

நட­மா­டும் உணவு வண்­டி­யில் விற்­பனை செய்­யப்­பட்ட பற்­றி­ஸில் துருப்­பி­டித்த ஆணி இருந்­தது என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட வியா­பா­ரிக்கு ஐயா­யி­ரம் ரூபா அப­ரா­தம் விதித்­தது மன்­னார் மாவட்ட நீதி­மன்று.

மன்­னார் சின்­னக் கடைப் பகு­தி­யில் தள்ளு வண்­டி­யில் நட­மா­டும் சேவை­யில் சிற்­றுண்டி வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு வரும் ஒரு­வ­ரி­டம் நுகர்­வோர் ஒரு­வர் பற்­றிஸ்­கள் கொள்­வ­ள­னவு செய்­துள்­ளார். அந்­தப் பற்­றிஸ்­க­ளில் ஒன்­றில் துருப்­பி­டித்த ஆணி ஒன்று கண்டு பிடிக் கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நுகர்­வோ­ரால் மன்­னார் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­க­ரி­டம் குறித்த விடயம் தொடர்­பா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் ஆராய்ந்து மன்­னார் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தார். வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

விசா­ர­ணை­களின் போது மன்­றில் முறைப்­பாட்­டா­ள­ரும் சந்­தேக நப­ரும் முன்­னி­லை­யா­கி­னர். வியா­பாரி தனது குற்­றத்தை ஏற்­றுக் கொண்­டார். இத­னால் நீதி­வான் 5 ஆயி­ரம் ரூபா அப­ரா­தம் விதித்­த­து­டன் தடை விதிக்­கப்­ப­ட்டி­ருந்த அவ­ரின் தொழி­லைத் தொடர்ந்து மேற்­கொள்­ள­வும் கட்­டளை பிறப்­பித்­தார்.