“எருமைசாணி” ஹரிஜாவுக்கு திருமணம்!

யூடியூப் வீடியோக்கள் மூலம் பலர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளனர் .

அந்த வரிசையில் தமிழ் மொழி மூல வீடியோக்களில் ஆண்கள் அதிகமாக இருந்தாலும், பெண் பிரபலம் என்று சொன்னவுடனேயே முதலில் நினைவுக்கு வருபவர் எருமைசாணி சேனல் ஹரிஜா தான் .

இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் படடாளமே உள்ளது. தற்போது ஹரிஜா வெள்ளித்திரையிலும் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நேரத்தில் ஹரிஜாவுக்கு அவருடைய நெடுநாள் நண்பர் அமர் என்பவருடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.