வவுனியா இராசையை மருந்தக களஞ்சியத்தில் தீ விபத்து: தீயணைப்படையினர் விரைவு (படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்த களஞ்சியத்தில் நேற்று  (04.06.2018) இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள்

வவுனியா வைரவப்புளியங்குளம் இராசதுரை வீதியில் அமைந்துள்ள இராசையா மருந்தகத்தின் உரிமையாளரின் இல்லத்தில் உள்ள மருந்தக களஞ்சியத்தில் திடீரேன தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நகரசபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் 30 நிமிடங்களாக போராடி தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

களஞ்சியசாலையில் ஆயுள்வேத மருந்து தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் இவ் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like