இன்றைய ராசிபலன் 09-06-2018

மேஷம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
மிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்க நினைக்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்: தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன ரகத்தில் புதிய டிசைனில் ஆடைகள் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்: மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் காலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தடைப்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
துலாம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குலதெய்வ வழிபாடு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படக்கூடும்.
மகரம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கும்பம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.
மீனம்: எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like