இன்றைய ராசிபலன் 10-06-2018

மேஷம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். நீண்டகாலமாக சந்திக்காமலிருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
ரிஷபம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படுமென்றாலும் தேவையான பணம் கையிலிருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அனுசரித்துச் செல்லவும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் பிரச்னை தருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பயணங்களைத் தவிர்க்கவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கடகம்: தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்க்கவும்.வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். அதனால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருந்தாலும், பணியாளர்களின் போக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
கன்னி: இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.உறவினர்கள் சங்கடப்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கோபத்துடன் பேசினாலும் பொறுத்துக்கொள்வது அவசியம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க நேரிடும்.
துலாம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். பிள்ளைகளால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் விற்பனை கூடுதலாக இருக்கும். பணியாளர் களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். முக்கிய விஷயம் ஒன்றில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை மிகவும் பயன் தருவதாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மகரம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
கும்பம்: தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். ஆனால், விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.
மீனம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை நன்றாக யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.லாபம் எதிர்பார்த்ததுபோலவே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.