கடும் காற்றினால் வீதியில் சரிந்து வீழ்ந்த விளம்பரப் பலகை!!

யாழ் நகரில் இன்று மாலை பிரபல தனியார் நிறுவனத்தின் பாரிய விளம்பரப் பலகை ஒன்று கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது.
யாழ் நகர் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள சந்தியில் குறித்த விளம்பரப் பலகை சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதனால், குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பிதம் அடைந்தது.

Get real time updates directly on you device, subscribe now.