வடக்கில் நாளை கடையடைப்பு!!

வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கட­லட்டை பிடிப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ளதை நிறுத்­து­ மாறு வலி­யு­றுத்தி நாளை திங்­கட்­கி­ழமை மதி­யம்­ வரை கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அன்று பேர­ணி­யும் இடம்­பெ­ற­வுள்­ள­தால் அனை­வ­ரை­யும் ஒத்­து­ழைக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

வடக்கு கடற்­றொ­ழில் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் சமா­சத் தலை­வர் தவச்­செல்­வம் இவ்­வாறு அழைப்பு விடுத்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சமாச அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர் இவ்­வாறு அழைப்பு விடுத்­தார்.அதில் அவர் தெரி­வித்­தா­வது,

வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோ­த­மாக கட­லட்டை பிடிப்­ப­தைத் தடுக்­கக்­கோரி பல போராட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஜன­நா­யக ரீதி­யாக எமது போராட்­டத்தை விஸ்­த­ரிக்­கும் வகை­யில் நாளை திங்­கட்­கி­ழமை மதி­யம்­வரை அனைத்து வர்த்­த­கர்­க­ளும் கடை­யைப் பூட்டி கடை­ய­டைப்பு போராட்­டத்­துக்கு ஆத­ரவு தர­வேண்­டும்.

முச்­சக்­கர வண்டி சங்­கம், கூட்­டு­ற­வுச் சங்­கங்­கள், வணி­கர் கழ­கம் ஆகி­ய­ன­வும் எமக்கு ஆத­ரவு தர­வேண்­டும்.

எமது போராட்­டத்­தின்­போது மருத்­து­வ­மனை மற்­றும் பாட­சா­லை­கள் வழ­மை­போல இயங்க நாம் கோரு­கின்­றோம். மதி­யம்­வரை கடை­களை மட்­டும் பூட்டி எமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளோம்.
அன்று பேர­ணி­யும் இடம்­பெ­றும்.

அது எமது சமாச அலு­வ­ல­கத்­தில் ஆரம்­பித்து யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்தை அடைந்து மாவட்­டச் செய­லர் மற்­றும் வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு மனுக்­க­ளைக் கைய­ளிக்­க­வுள்­ளோம்.

இந்­தப் போராட்­டத்­துக்கு வடக்­கில் உள்ள 128 சங்­கங்­கள், 10 சமா­சங்­கள் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளன.

எமது தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சி­னைக்கு நாமே போரா­டித் தீர்வு காண­வேண்­டிய சூழ்­நி­லைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளோம். ஆகவே நாளை எமது தொழி­லா­ளர்­கள் கட­லுக்­குச் செல்­லாது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­னர்.

எமது இந்த அகிம்­சைப் போராட்­டங்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காத பட்­சத்­தில், எமது நிலங்­கள் அப­க­ரிக்­கப்­பட்­டதை நாம் வெளி­நாட்டு தூதர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­ய­து­போல, எமது கட­லும் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­வதை தூதர்­க­ளுக்­குச் சுட்­டிக்­காட்டி அவர்­க­ளுக்கு மனுக் கொடுக்­க­வுள்­ளோம் – என்­றார்.

அங்கு கருத்­துத் தெரி­வித்த வட­ம­ராட்சி சமாச தலை­வர் வர்­ண­கு­ல­சிங்­கம் அர­சி­யல்­வா­தி­க­ளைக் குற்­றஞ்­சாட்­டி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது:

வட­ம­ராட்சி கிழக்­கில் இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத கட­லட்டை பிடித்­த­லைத் தடுக்க வலி­யு­றுத்தி கடற்­தொ­ழில் சங்­கங்­க­ளும் சமா­சங்­க­லுமே போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வந்­தன. இதற்­குள் புகுந்த சில அர­சி­யல்­வா­தி­கள் போராட்­டத்­தைத் திசை­தி­ருப்ப சதி செய்ய முற்­ப­டு­கின்­ற­னர்.

கட­ல­டை்­டைப் பிடித்­த­லைத் தடுக்­கு­மாறு ஆரம்­பத்­தில் சமா­சங்­க­ளும் கடற்­தொ­ழில் சங்­கங்­க­ளும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வந்­தன. இதற்­குள் புகுந்த சில அர­சி­யல்­வா­தி­கள் போராட்­டங்­களை மழுங்­க­டிக்­கச் சதி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

எமது மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்­கவே நாம் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளைத் தெரி­வு­செய்து நாடா­ளு­மன்­றுக்கு அனுப்­பி­யுள்­ளோம். அவர்­கள் நாடா­ளு­மன்­றில் குரல்­கொ­டுத்து இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண முடி­யா­து­விட்­டால் அவர்­கள் தமது பத­வி­க­ளைத் தூக்கி ஏறி­ய­வேண்­டும்.

எமது ஜன­நா­ய­கப் போராட்­டத்­துக்­குத் தீர்வு கிடைக்­கா­து­விட்­டால் நாம் தொடர் போராட்­டத்­தில் கள­மி­றங்­கத் தீர்­மா­னித்­துள்­ளோம் – என்­றார்.