யாருமில்லா வீட்டுக்குள் நடந்த மோதல் : பெண்ணொருவரின் அதிரடி செயற்பாடு!!

வீட்டிற்கு நுழைந்த திருடனை தைரியமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்து அலுமாரியை திறந்து பொருட்கள் திருடி கொண்டிருந்த திருடனை, குறித்த பெண் தனியாக பிடித்து வீட்டிற்கு வெளியே இழுந்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கொடெல்ல, ரனபியகம பிரதேசத்தில் வாழும் பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.

குறித்த பெண் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வெளியே சென்றிருந்தார். வீடு திரும்பும் போது வீட்டின் பின் பக்க ஜன்னல் திறந்திருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண் வீட்டினுள் சத்தம் இல்லாமல் சென்றுள்ளார். இதன் போது திருடன் ஒருவர் அலுமாரியை திறந்து பொருட்கள் தேடி கொண்டிருந்தார். திடீரென பாய்ந்து அவரது சட்டையை பிடித்து திருடனை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்துள்ளார்.

சந்தேக நபர் வீட்டிற்கு வெளியே வந்த போது திருடன், பெண்ணின் பிடியில் இருந்து தப்பியுள்ளார். உடனடியாக பெண் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய போது மறைந்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.