இராணுவமாக மாறிய சிறுத்தைகள்! நடுங்கி போன சிங்கள பயணிகள்!

இலங்கையில் கும்பலாக சென்று சிறுத்தை கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் அச்சம் அடைந்ததாக தெரிய வருகிறது.

தமது பிள்ளையை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நோக்கில் சிறுத்தை கூட்டம் ஒன்று வீதியை கடத்து சென்றமை, இராணுவ நகர்வு போன்று இருந்ததாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

புத்தல – கதிர்காமம் செல்லும் வீதியில் சிறுத்தை கூட்டம் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

சுற்றுலா பயணிகள் குழுவொன்று வீதியில் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு சிறுத்தை கூட்டம் ஒன்று பயணித்துள்ளது.

குறித்த கூட்டத்தில் சிறுத்தை தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீதியை கடந்து சென்றுள்ளன.

வீதியின் இரண்டு பக்கங்களையும் அவதானித்து விட்டு முதல் சிறுத்தை வீதியை கடந்தவுடன் அதன் பின்னால் 3 சிறுத்தைகள் பயணித்துள்ளன.

வீதியில் சென்றவர் சிறுத்தை வீதியை கடக்கும் வரையில் அச்சத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like