யாழில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் கடல் நீரினை நன்னீராக்கும் செயற்திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 266 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு நன்னீர் வழங்கும் வகையில் மருதங்கேணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தினூடாக யாழ்.குடாநாட்டில் 177 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளனர்.

அந்த வகையில் இந்த திட்டமானது எதிர்வரும் 2020 ஆண்டளவில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.