மீண்டும் தலையெடுக்கும் அமானுஷ்ய சக்தி….?? பேய் பீதியினால் இரவில் வீடுகளுக்குள் முடங்கிப் போகும் யாழ் மக்கள்…!!

யாழ்ப்பாண மக்களை பீதியில் உறைய வைக்கும் அமானுஸ்ய சக்தியொன்று உலவி வருவதாக மீளவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மீளவும் மக்களை பீதியில் உறைய வைக்கும் வகையில் அமனுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் பூதங்களினால் பீதி ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பேய் உருவாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த அமானுஸ்ய சக்தியின் ஒரு கையில் இரத்தம் தோய்ந்த சேவல் ஒன்று இருப்பதாகவும், மற்றைய கையில் இரத்தம் தோய்ந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பேய் பற்றிய தகவல்களை கூறிய நபர்கள் பொய் கூறுவதாக முன்னதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறு கூறியவர்களே இந்த பேயைக் கண்டுள்ளதாகவும், சில ஊடகங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை ஆடையணிந்த இந்த பேயின் முகத்தின் ஒரு பகுதி தெளிவாக தெரிவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாலை 1.00 மணியின் பின்னரே இந்தg; பேயை மக்கள் கண்டுள்ளனர்.பேய் பீதியினால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதனை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like